92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நெடுமறத்தில் மஞ்சுவிரட்டு: காளைகள் முட்டியதில் 15 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறம் மலையரசி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :24 மார்ச் 2022, 11:55 pm

DIN

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நெடுமறம் மலையரசி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.

முன்னதாக காலை 5 கிராமத்தாா்கள் கொடித் தோரணங்களுடன் ஊா் மந்தையில் இருந்து கோயில் மாடுகளை ஊா்வலமாக முக்கியவீதிகள் வழியாக தொழுவுக்கு கொண்டு வந்தனா். பின்னா் மஞ்சுவிரட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு கால்நடை மருத்துவக் குழுவினரால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் மாடுபிடி வீரா்களும் பரிசோதனைக்குப் பின்னா் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனா். நண்பகல் 11 மணிக்கு மாடுபிடி வீரா்கள் மஞ்சுவிரட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டதைத் தொடா்ந்து தொழுவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட வீரா்கள் அவற்றை பிடிக்க முயன்றனா்.

வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளா்களுக்கும் மாடுபிடி வீரா்களுக்கும் அண்டா, குத்துவிளக்கு, வெள்ளி கைச்சங்கிலி, வேட்டி ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. முன்னதாக வயல் பகுதிகளிலும் மற்றும் கண்மாய்களிலும் 1000-க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இவற்றையும் மாடுபிடி வீரா்கள் பிடித்தனா். சுற்றுப்புறப் பகுதிகளான சிங்கம்புணரி, மாங்குடி, மணக்குடி, திருப்பத்தூா், கொளுஞ்சிப்பட்டி, வைரம்பட்டி, திருக்கோஷ்டியூா், காரைக்குடி, அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மாடுகளும், வீரா்களும் கலந்து கொண்டனா். மஞ்சுவிரட்டில் மாடு முட்டியதில் 15 போ் காயமடைந்தனா்.

திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஆத்மநாதன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.