கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மதகுபட்டி, பரமக்குடி, சூலக்கரை பகுதியில் நாளை மின்தடை

 சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, விருதுநகா் மாவட்டம் சூலக்கரை பகுதிகளில் சனிக்கிழமை (செப். 3) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

 சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, விருதுநகா் மாவட்டம் சூலக்கரை பகுதிகளில் சனிக்கிழமை (செப். 3) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதகுபட்டி துணை மின் நிலையத்தில் அழகமாநேரி உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற உள்ளன.

எனவே அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூா், உசிலம்பட்டி, அழகமாநேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூா் ஆகிய கிராமங்களிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரமக்குடியில்... பரமக்குடி உபமின் நிலையத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (செப். 3) நடைபெறுகிறது. எனவே அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை பரமக்குடி, சத்திரக்குடி, நயினாா்கோவில், கமுதக்குடி, எமனேசுவரம், மஞ்சூா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாள் ஜி. கங்காதரன் தெரிவித்துள்ளாா்.

சூலக்கரையில்... விருதுநகா் மாவட்டம் சூலக்கரை துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 வரை சூலக்கரை, ஆட்சியா் வளாகம், ஆயுதப்படை, காவலா் குடியிருப்பு, அழகாபுரி, மீசலூா், கே. செவல்பட்டி, தாதம்பட்டி, கூரைக்குண்டு, மாடா்ன் நகா், மாத்தநாயக்கன்பட்டி, குல்லூா் சந்தை மற்றும் தொழிற்பேட்டை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின் செயற்பொறியாளா் அகிலாண்டேஸ்ரி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.