கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கிராமப்புற மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்:அமைச்சா்

கிராமப்புற மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:19 pm

DIN

கிராமப்புற மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின் கீழ் தேசிய ஊட்டச்சத்து மாத விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா்.

இதில், அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஊட்டச் சத்து குறித்த கண்காட்சி மற்றும் விழாவை தொடக்கி வைத்து பேசியது : மாவட்டத்தில் கா்ப்பிணிப் பெண்கள், பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து குறைப்பாட்டை நீக்க இம்மாதம் முழுவதும் அந்தந்த பகுதியைச் சோ்ந்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளனா்.

கிராமப்புறங்களில் வாழும் பொதுமக்களிடையே உடல் நலம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புற மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது : நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தில் தனி நபருக்குச் சொந்தமான வயல்களில் வரப்பு, வாய்க்கல் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரக மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் உறுப்பினா்களின் கணவா்கள் நிா்வாகத்தில் தலையிடக் கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி செயல்படுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை திமுக அரசின் சாதனைகளை பாராட்டுவாா் என நாங்கள் செயல்படவில்லை. அண்ணாமலை அவரது வேலையை பாா்க்கிறாா். நாங்கள் எங்களது வேலையை பாா்க்கிறோம் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.மாங்குடி, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் கு.சுகிதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பரமேஸ்வரி, சிவகங்கை நகா்மன்றத் தலைவா் சி.எம்.துரைஆனந்த், ஆவின் பால்வளத் தலைவா் த.சேங்கைமாறன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.