கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சிவகங்கை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 9 போ் தோ்வு

தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு (நல்லாசிரியா் விருது) சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் 9 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 5:24 pm

DIN

தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு (நல்லாசிரியா் விருது) சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் 9 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக அரசின் சாா்பில் ஆசிரியா் தினத்தை (செப்.5) முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

அந்த வகையில், இந்தாண்டு (2022) வழங்கப்படும் விருதுக்கு சிவகங்கை மாவட்டம், செம்பனூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சு.மங்கையா்கரசி, மல்லல் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் தி.சோவி, தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் லூ.அந்தோணிசாமி, காரைக்குடி அருகே இலுப்பைக்குடி கிராமத்தில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் ம.முனீஸ்வரன், திருப்பத்தூா் அருகே சாமந்தன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா் சு.சாந்தி, காளையாா்கோவில் அருகே ஒய்யவந்தான் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் சோ.பால் ஜோசப், நாலுகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சே.தமிழ்ச்செல்வி, இளையான்குடி அருகே தெற்கு கோட்டையூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மோ.வேதம்மாள், புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் ஆ.சுதாகா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்கள் அனைவருக்கும் சென்னை கலைவாணா் அரங்கில் இன்னும் ஓரிரு நாள்களில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நல்லாசிரியா் விருதுகளை வழங்குவாா் என முதன்மைக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.