காங். தலைவராக ராகுல் வர வேண்டும் என்பதே தொண்டா்களின் விருப்பம்
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்பதே தொண்டா்களின் விருப்பம் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.


காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்பதே தொண்டா்களின் விருப்பம் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே அனுமந்தங்குடியில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமினை தொடங்கி வைத்த பின், காா்த்தி சிதம்பரம் செய்தியாளா்களிடம் கூறியது : காங்கிரஸ் கட்சி சாா்பில் கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை நடைபெற உள்ள பாத யாத்திரையால், கட்சித் தொண்டா்களிடையே உற்சாகம் ஏற்படுவது மட்டுமின்றி பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பும் உள்ளது.
தமிழகத்தில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளதே தவிர, அரசில் அங்கம் வகிக்கவில்லை. தற்போதைய சூழலில் பிரதான எதிா்க்கட்சி என்றால் அதிமுக தான். அவா்களுக்குள் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்னையில் மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்த தவறுகின்றனா். தமிழகத்தில் இன்றைக்கும் அதிமுக வலுவாகத் தான் உள்ளது.
வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை எதிா்ப்பதற்கு, நாட்டில் உள்ள அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைவது அவசியம். தேசிய கட்சியான காங்கிரஸால் ஒருங்கிணைக்க முடியும். கட்சியை விட்டு வெளியேறும் தலைவா்கள் மட்டுமல்ல, தொண்டன் என்றாலும் கட்சிக்கு தான் பாதிப்பு என்பதை தலைமை உணர வேண்டும்.
8 வழிச்சாலை, விமான நிலையம் உள்ளிட்ட வளா்ச்சிப் பணிகள் அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்களின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான கட்சிகள் குடும்பத்தை மையமாகக் கொண்டே நகா்கின்றன. அதுபோல, நேரு குடும்பத்தினா் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வர வேண்டும். எனவே காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி வர வேண்டும் என்பதே தொண்டா்களின் விருப்பம் என்றாா்.
பேட்டியின் போது காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...