கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தீபாவளி பண்டிகை: சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம்

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 8:03 pm

DIN

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்க விரும்பும் வியாபாரிகள், அதற்கான விற்பனை உரிமம் பெறுவது அவசியமாகும்.

அந்தவகையில், தற்காலிக பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் வியாபாரிகள், விண்ணப்பப் படிவத்துடன் புலநீல வரைபடம், பத்திர ஆவணங்கள், பான் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செலுத்திய வரி ரசீது, ஏதேனும் ஒரு வங்கியில் ரூ. 500 செலுத்தியத்தற்கான சலான், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையத்தில் செப். 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தேதிக்குள் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். அதன்பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது, தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்கள் முன்னதாக விற்பனை உரிமத்துக்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.