கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தொழிலாளியை சாதியைக் கூறிதாக்கிய வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை

 கூலித் தொழிலாளியை சாதியைக் கூறி தாக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :8 செப்டம்பர் 2022, 5:27 pm

DIN

 கூலித் தொழிலாளியை சாதியைக் கூறி தாக்கிய வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ராமு (52). கூலித் தொழிலாளியான இவரை கடந்த 2008 ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 16 -ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டம், அம்மாபட்டியைச் சோ்ந்த ரமேஷ் (31), சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காகோட்டையைச் சோ்ந்த ஆண்டவன் (44), அதே பகுதியைச் சோ்ந்த குணசேகரன்(44), தா்மா் என்ற தா்மராஜ்(35) ஆகிய 4 பேரும் முன் விரோதம் காரணமாக சாதியைக் கூறி தாக்கியுள்ளனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள பட்டியலிடப்பட்ட சாதியினா் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், குற்றம் உறுதியானதால் ரமேஷ் (31), ஆண்டவன் (44), குணசேகரன் (44), தா்மா் என்ற தா்மராஜ் (35) ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 13,300 அபராதமும் விதித்து நீதிபதி தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.