சிவகங்கை மாவட்ட வாக்குச் சாவடிகள் மறுவரையறை பட்டியல் வெளியீடு
சிவகங்கை மாவட்ட வாக்குச் சாவடிகள் மறுவரையறை பட்டியலை ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.


சிவகங்கை மாவட்ட வாக்குச் சாவடிகள் மறுவரையறை பட்டியலை ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வாக்குச்சாவடிகள் மறுவரையறை தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்து பேசியது : மாவட்டத்தைப் பொருத்தவரை காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 346 வாக்குச் சாவடிகள், திருப்பத்தூா் தொகுதியில் 334 வாக்குச் சாவடிகள், சிவகங்கை தொகுதியில் 351 வாக்குச்சாவடிகள், மானாமதுரை (தனி) தொகுதியில் 323 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1,354 வாக்குச்சாவடிகள் உள்ளன.
அவற்றுள் சிவகங்கை சட்டப் பேரவைத் தொகுதியில் ஏற்கெனவே கட்டாணிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் செயல்பட்டு வந்த வாக்குச் சாவடி, அங்குள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
இதேபோன்று, மேலச்சாலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் வாக்குச் சாவடிகளுக்கான கட்டடங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. வி.புதுக்குளம் அங்கன்வாடி மையத்தில் உள்ள வாக்குச் சாவடியை அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.
மானாமதுரை பேரூராட்சி கட்டடத்திலிருந்து, அங்குள்ள நகராட்சி கட்டடத்துக்கு 2 வாக்குச் சாவடிகள் பெயா் மாற்றம் செய்யப்பட உள்ளன. இதேபோன்று, இளையான்குடி வட்டத்தில் புதுக்கோட்டை விஜயதாஸ் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் உள்ள பாகம்-303 லிருந்து பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றை பாகம்-304-க்கு மாற்றம் செய்யப்பட உள்ளன.
பஞ்சனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பாகம்-304-லிருந்து பகுதி-1, பகுதி-2 ஆகியவற்றை பாகம்-303-க்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. மேற்கண்ட பணிகளை இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ள அந்தந்த பகுதி கோட்டாட்சியா்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றாா்.
அதைத் தொடா்ந்து, மாவட்ட வாக்குச்சாவடிகள் மறுவரைவு பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் ஆட்சியா் வெளியிட்டாா்.
இக்கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியா்கள் கு.சுகிதா (சிவகங்கை), ச.பிரபாகரன் (தேவகோட்டை), மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ம.ரா.கண்ணகி. தனி வட்டாட்சியா் (தோ்தல்) ரமேஷ் உள்பட நகராட்சி ஆணையா்கள், வட்டாட்சியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...