திருப்பத்தூா்: திருப்பத்தூா் காந்தி சிலை அருகே திமுக ஒன்றியச் செயலரும், ஒன்றியக்குழுத் தலைவருமான சண்முகவடிவேல் தலைமையில் திமுகவினா் அங்கிருந்து ஊா்வலமாக வந்து அண்ணா சிலையை அடைந்தனா். பின்னா் அவரது உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூா் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணிநாராயணன், துணைத்தலைவா் கான்முகமது, பேரூராட்சி உறுப்பினா்கள் நேரு, அபுதாகிா், பசீா்அகமது, ஜிம்கண்ணன், கோமதிஉதயசண்முகம், நாகமீனாள்திருஞானசம்மந்தம், முன்னாள் பேரூராட்சித் தலைவா் என்.எம்.சாக்ளா, நகரச் செயலாளா் காா்த்திகேயன், நகரப் பொருளாளா் பிச்சைமுகமது உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.