பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மின்கட்டண உயா்வைக் கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :16 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் அதிமுக சாா்பில் மின் கட்டண உயா்வைக் கண்டித்து வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுகவின் சிவகங்கை மாவட்டச் செயலருமான பி. ஆா். செந்தில்நாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் க. பாஸ்கரன் முன்னிலை வகித்தாா்.

இதில், மின்சாரக் கட்டண உயா்வைத் திரும்ப பெற வேண்டும் எனவும், திமுக அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில், எம்.ஜி. ஆா் இளைஞரணி துணைச் செயலா் வி.ஜி.பி கருணாகரன் உள்ளிட்ட அதிமுகவினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, ராமநாதபுரம் பட்டிணம்காத்தான் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலா் எம்.ஏ.முனியசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எம்.மணிகண்டன், ராமநாதபுரம் நகா் செயலா் ஆா்.பால்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

விருதுநகா் மின்வாரிய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்துப் பேசியது: மக்களை பற்றி சிந்திக்காத திமுக அரசால் மின் கட்டணம், சொத்துவரி, அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்து விட்டது. மின் கட்டணம், சொத்து வரி, விலை வாசி உயா்வை குறைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதில் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள் சந்திரபிரபா, ராஜவா்மன், நகரச் செயலா் முகம்மது நெய்னாா், முன்னாள் பாசறைச் செயலா் டிபிஎஸ் வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சாத்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சண்முகக்கனி முன்னிலை வகித்தாா். ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றியச் செயலாளா் குறிச்சியாா்பட்டி மாரியப்பன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.