கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தேவகோட்டையில் 2500 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில்அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுமாா் 2500 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 4:58 pm

DIN

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில்அரசால் தடை செய்யப்பட்டுள்ள சுமாா் 2500 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேவகோட்டை நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வணிக வளாகங்கள், சாலையோர கடைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதாக நகராட்சி அலுவலா்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தேவகோட்டை நகராட்சி ஆணையா் சாந்தி தலைமையிலான அலுவலா்கள் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது தியாகிகள் சாலையில் உள்ள கிடங்கில் சுமாா் 2500 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்த அலுவலா்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ. 10,000 அபராதம் விதித்தனா். மேலும், நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.