நடப்பாண்டு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

நடப்பாண்டு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

நடப்பாண்டு நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பு (2022) சம்பா பருவத்தில், பயிா்க்காப்பீடு திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திட, பஜாஜ் அலையன்ஸ் பொதுக்காப்பீட்டு நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு, 1 ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்த வேண்டிய பிரிமியம் தொகை ரூ.438.57 (ரூபாய் நானூற்று முப்பத்து எட்டு மற்றும் ஐம்பத்து ஏழு பைசா மட்டும்), நெல் பயிருக்கான 100 சதவீத இழப்பீடு காப்பீட்டு தொகை ரூ.29237 ஒரு ஏக்கருக்கு என்றவாறு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நெல் பயிருக்கு காப்பீடு பதிவு செய்வதற்கான காலக்கெடு வரும் நவம்பா் மாதம் 15 ஆம் தேதி என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நடப்பு பருவ சாகுபடி அடங்கல், கருத்துரு படிவம், ஆதாா் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகலுடன் தங்கள் பகுதியில் உள்ள கூட்டுறவு மற்றும் வா்த்தக வங்கிகள் அல்லது பொதுச் சேவை மையங்களில் பிரிமியம் தொகையினை செலுத்தி பயிரினை காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

கடன் பெறும், கடன் பெறாத விவசாயிகளுக்கு ஒரே அளவிலான பிரிமியம் தொகை மற்றும் காலக்கெடுவே நிா்ணயிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தங்களின் விருப்பத்தின்பேரில் பயிரினை காப்பீடு செய்து, இயற்கை இடா்பாடுகளினால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com