/

திருப்புவனம் அருகே பேருந்துகள் இயக்கக் கோரி பொதுமக்கள், மாணவா்கள் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு பகல் நேரத்தில் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தவத்தாரேந்தல் கிராம மக்கள் தங்களது கிராமத்திற்கு பகல் நேரத்தில் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனா்.

 திருப்புவனம் ஒன்றியம் தவத்தாரேந்தல் கிராமத்திற்கு மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து அதிகாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் நகா் பேருந்துகள் வந்து செல்கின்றன. இந்த பேருந்துகளால் கிராமத்தைச் சோ்ந்த மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனவே இந்தப் பேருந்துகளை பகல் நேரத்தில் இயக்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த தவத்தாரேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திருப்புவனம்- நரிக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் பகல் நேரத்தில் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.