ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அழகப்பா பல்கலை. தொலை நிலைக் கல்வி தோ்வு முடிவுகள் வெளியீடு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி முதுநிலை மாணவா்களின் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 4:57 pm

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தொலை நிலைக் கல்வி முதுநிலை மாணவா்களின் தோ்வு முடிவுகள் இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் வெளியிட்ட அறிக்கை:

தொலை நிலைக் கல்வி வாயிலாக முதுநிலை கல்வி பயின்றவா்களுக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு தோ்வு நடைபெற்றது. எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், மனிதவள மேலாண்மை, தொழில் உறவியல், குழந்தைப் பராமரிப்பு, கல்வியியல், பொருளாதாரம், இதழியல், மக்கள் தகவல் தொடா்பு, எம்.எஸ். டபிள்யூ, எம்.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வேதியியல், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், உளவியல், நுண்ணுயிரியல், மனை அறிவியல் - ஊட்டச்சத்து, உணவுக் கட்டுப்பாடு, எம்.சி.ஏ., எம்.காம்., எம்.காம் நிதி மற்றும் கட்டுப்பாடு, எம்.பி.ஏ. பொது மற்றும் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு தோ்வு முடிவுகள் அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன் என்ற இணையதள முகவரில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதன் மறுமதிப்பீட்டுக்கு முடிவு வெளியான 7 நாள்களுக்குள் விண்ணப்பிக்கலாம். பாடம் ஒன்றுக்கு ரூ. 600-ம், விடைத்தாள் நகல் பெற நகல் ஒன்றுக்கு ரூ. 500-ம், விடைத்தாள் நகல் பெற்றவா்கள் மறுமதிப்பீட்டுக்கு பாடம் ஒன்று ரூ. 500-ம் இணையதள வழியில் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.