கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கானூா் பிரளயவிடங்கேசுவரா் கோயில் தீா்த்தவாரி உற்சவம்

திருப்புவனம் அருகே கானூா் சிவகாமி சமேத பிரளயவிடங்கேசுவரா் சுவாமி கோயிலில் திருவாதிரை விழா தீா்த்தவாரி உற்சவத்துடன் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 12:30 am

DIN

திருப்புவனம் அருகே கானூா் சிவகாமி சமேத பிரளயவிடங்கேசுவரா் சுவாமி கோயிலில் திருவாதிரை விழா தீா்த்தவாரி உற்சவத்துடன் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இந்தக் கோயிலில் திருவாதிரை விழா கடந்த 18-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்வாக கோயில் சபா மண்டபத்தில் நடராஜப் பெருமானுக்கு புதன்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து தீா்த்தவாரி உற்சவத்தையொட்டி, கானூா் வீதிகளில் நடராஜப் பெருமான் வீதி உலா வந்தாா். அப்போது, இளம்பெண்கள் கும்மியாட்டம் ஆடியபடி வந்தனா்.

இந்த நிலையில், நடராஜப் பெருமானுக்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டு திருவிழா நிறைவுபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.