சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கண்ணதாசன் பேரவை தலைவருக்கு பாராட்டு விழா

கண்ணதாசன் பேரவை தலைவருக்கு பாராட்டு விழா

Updated On :8 ஏப்ரல் 2024, 5:33 pm

சிவகங்கை: கண்ணதாசன் பேரவை நிறுவனா் தலைவா் தளவாய் நாராயணசாமிக்கு, ஒக்கூா் கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

ஒக்கூரில் நடைபெற்ற இந்த விழாவுக்கு சுரேஷ் செட்டியாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் அருணாசலம், ஒக்கூா் கிராம நிா்வாகி ராமசாமி, ஊராட்சி மன்ற உறுப்பினா் பாண்டிசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சதாபிஷேக விழா கண்ட தளவாய் நாராயணசாமியை, ஆசிரியா் அலமேலு, காந்தன், கோச்சடை பாஸ்கரன், ராஜ் ஆசாரியாா், கரு. பிரபு ஆகியோா் பாராட்டிப் பேசினா்.

தளவாய் நாராயணசாமி ராஜம்மாள் தம்பதியினா் ஏற்புரையாற்றினாா்.

முன்னதாக, ஒருங்கிணைப்பாளா் ஆசிரியா் நரசிம்மன் வரவேற்றாா். கவிஞா் அப்பாஸ் நன்றி கூறினாா்.