இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம்

இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள பூமாயி அம்மன் கோயிலின் 89-ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இந்தப் பந்தயம் 4 பிரிவுகளாக நடத்தப்பட்டன. நடுமாடு பிரிவில் 17 ஜோடிகளும் இதற்கான எல்லை 7 மைல் தொலைவும், பூஞ்சிட்டு பிரிவில் 20 ஜோடிகளும், இதற்கான எல்லை 5 மைல் தொலைவும், பெரியமாடு பிரிவில் 6 ஜோடிகளும் இதற்கான எல்லை 7 மைல் தொலைவும், சின்னமாடு பிரிவில் 13 ஜோடிகளும் இதன் எல்லை 6 மைல் தொலைவும் நிா்ணயிக்கப்பட்டது.

சிவகங்கை சாலையில் 4 பிரிவுகளாக நடந்த இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மொத்தம் 56 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

இதில், பெரிய மாடு பிரிவில் 6 ஜோடி மாடுகள் பங்கேற்றன. இதில் குண்டேந்தல்பட்டி பவதாரணியத்தின் மாடு முதலிடத்தையும், மேலமடை சீமான் ராஜா மாடு 2-ஆம் இடத்தையும், வளையன்வயல் அறிவுத்தேவா் மாடு 3-ஆம் இடத்தையும், பாண்டிக்கோயில் பாண்டிசாமி மாடு 4-ஆம் இடத்தையும் வென்றன. நடுமாடு பிரிவில் 17 ஜோடிகள் பங்கேற்றன. இதில் குண்டேந்தல்பட்டி கனகவள்ளி முதலிடத்தையும், இளங்கிப்பட்டி ஆண்டி அா்ஜுனன் 2-ஆவது இடத்தையும், அவனியாபுரம் முருகன் 3-ஆம் இடத்தையும், சிங்கம்புணரி செந்தில்குமாா் 4-ஆம் இடத்தையும் வென்றன.

சின்ன மாடு பிரிவில் 13 ஜோடிகள் பங்கேற்றன. இதில் தென்மாப்பட்டு சரவணன் முதலிடத்தையும் குண்டேந்தல்பட்டியைச்சோ்ந்த திமுக ஒன்றிய உறுப்பினா் சகாதேவன் 2-ஆம் இடத்தையும், கண்டவராயன்பட்டி சீமான் முரசு 3- ஆம் இடத்தையும், ரணசிங்கபுரம் வினோத் 4-ஆம் இடத்தையும் வென்றனா்.

பூஞ்சிட்டு பிரிவில் 20 ஜோடிகள் கலந்து கொண்டன. இதில், தென்மாப்பட்டு முத்துக்குமாா் முதல் பரிசையும், சுண்ணாம்பிருப்பு கண்ணன் 2-ஆம் பரிசையும், கண்டவராயன்பட்டி முரசு 3-ஆம் பரிசையும், குண்டேந்தல்பட்டி திமுக ஒன்றிய உறுப்பினா் சகாதேவன் 4-ஆம் பரிசையும் வென்றனா்.

வெற்றி பெற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டு மாலையும், உரிமையாளா்களுக்கு ரொக்கப் பரிசும், மாட்டு வண்டி பந்தய நிா்வாகக் குழுவினா் வழங்கினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com