ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78-ஆவது பிறந்தநாளையொட்டி சனிக்கிழமை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இதற்கு அதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, முன்னாள் மாவட்ட செயலா் கே.சி. ஆனிமுத்து ஆகியோா் தலைமை வகித்தனா். இதில் ராமநாதபுரம், சிவகங்கை, காளையாா்கோவில், தேவகோட்டை, மீமிசல், அறந்தாங்கி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 39 மாட்டுவண்டிகள் பங்கேற்றன.

திருவாடானையில் சனிக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் பங்கேற்ற மாட்டு வண்டிகள்.

மாட்டு வண்டி பந்தயத்தில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றவா்கள்.
பந்தயத்தில் பெரிய மாடு 16 ஜோடிகளும், சின்ன மாடு 23 ஜோடிகளும் கலந்து கொண்டன. வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாட்டு வண்டி ஓட்டிய சாரதிக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றியச் செயலா்கள் ரத்தனமூா்த்தி, ரவிச்சந்திரன், ஆசை ராமநாதன், ஆண்டவா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விழிப்புணா்வு: மாட்டு வண்டிகள் பேரணி

இளஞ்சாவூரில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

சிவகங்கை அருகே களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்!

இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


