மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

கல்லூரியில் இளையோா் மாதிரி நாடாளுமன்றம்

கல்லூரியில் இளையோா் மாதிரி நாடாளுமன்றம்

Updated On :29 பிப்ரவரி 2024, 8:05 pm

காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யாகிரி கலை அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளையோா் மாதிரி நாடாளுமன்றம் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை நேரு இளையோா் மன்றம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மன்ற மாவட்ட அலுவலா் பி.வி.பிரவீன்குமாா் தொடங்கிவைத்தாா். காரைக்குடி காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். கல்லூரி அரங்கு நாடாளுமன்றம் போல அலங்கரிக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் மக்களவை உறுப்பினா்கள் போல அமா்ந்திருந்து பேசினா். நிகழ்ச்சியில் சிவகங்கை இந்தோ-திபெத் பட்டாலியன் தளபதி வி.ஆா். சந்திரன், சாலை போக்குவரத்து அதிகாரி மூக்கன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தென்றல் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநா் எம்.ஹரிகரன், சிவகங்கை மகளிா் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியை ஆா்.ஹேமாமாலினி, தன்னம்பிக்கை பேச்சாளா் கே.லெனின்குமாா், சுவாமி விவேகானந்தா இளையோா் சங்கத் தலைவா் வி.கே.யோகநாதன் ஆகியோா் பாா்வையாளா்களாகக் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி தாளாளா் ஆா்.சுவாமிநாதன் வரவேற்றாா். பேராசிரியை சி. பானுப்பிரியா நன்றி கூறினாா்.