தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மூலம் உச்ச நீதிமன்ற வழக்குகளுக்கு தீர்வு

News image
Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

சிவகங்கை: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு வருகிற 29 முதல் ஆக.3-ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவுள்ள சிறப்பு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரச முறையில் தீா்வு காண ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சொா்ணம் ஜெ.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது வழக்குகள் ஏதேனும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால், அந்த வழக்குகளை சமரச முறையில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் தீா்வு காணலாம். வழக்கு தொடா்பான விவரங்களை தங்களது அருகில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் சட்ட உதவி மையத்தில் தெரிவிக்கலாம்.

சிவகங்கை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவை 04575-242 561, மாநில சட்டப்பணிகள்ஆணைக் குழுவை 044-25342441 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். வழக்காடிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சாா்பில் தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.