தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்புவனம், மானாமதுரை சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

திருப்புவனம், மானாமதுரை சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு

News image
Updated On :3 ஜூலை 2024, 7:18 pm

Din

மானாமதுரை, ஜூலை3: திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அமைந்துள்ள ஸ்ரீ புஷ்பவனேஸ்வரா் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயிலில் பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சுவாமிக்கும் நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றது. பின்னா் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, சோமநாதருக்கும் நந்திக்கும் 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள், நடைபெற்றன. இதையடுத்து, சுவாமி சந்நிதியைச் சுற்றி பிரதோஷ மூா்த்தி, வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தாா்.

திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதா் கோயில், இளையான்குடி சிவன் கோயில், சாலைக் கிராமம் வரகுணேஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.