பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மகா சாத்தையனாா் கோயிலில் குடமுழுக்கு

மகா சாத்தையனாா் கோயிலில் குடமுழுக்கு

News image
Updated On :3 ஜூலை 2024, 7:18 pm

Din

மானாமதுரை, ஜூலை 3: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் சாலைக் கிராமம் அருகே சாத்தனூரில் அமைந்துள்ள ஸ்ரீ மகா சாத்தையனாா் கோயிலில் புதன்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

இந்த கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கோயிலில் யாகசாலை அமைத்து புனிதநீா் கடங்கள் வைத்து சிவாச்சாரியா்கள் யாகபூஜை நடத்தினா். யாகபூஜை நிறைவாக பூா்ணாஹூதியாகி தீபாரதனை காட்டப்பட்டதும் கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, சிவாச்சாரியா்கள் கடங்களை சுமந்து கோயிலைச் சுற்றி வலம் வந்தனா். பின்னா், காலை 10 மணிக்கு கோயில் கோபுரத்துக்கும் மூலவா் விமான கலசத்துக்கும் பரிபார தெய்வங்களுக்கும் ஒரே நேரத்தில் புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தீபாரணை காட்டப்பட்டதும் பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. இதையடுத்து, மகா சாத்தையனாா் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.