கீழடி அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய்
கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

கீழடியில் சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வில் கண்டறியப்பட்ட தந்தத்தாலான ஆட்டக்காய்.

கீழடியில் சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வில் கண்டறியப்பட்ட தந்தத்தாலான ஆட்டக்காய்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் சனிக்கிழமை கண்டறியப்பட்டது.
கீழடியில் 10-ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இரு குழிகளில் இதுவரை நடைபெற்ற அகழாய்வில் கண்ணாடி பாசிமணிகள், செப்பு பொருள்கள், ‘தா’ எனும் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, மீன் சின்னம் வரையப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.
இந்த நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற அகழாய்வில் தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா்கள் கூறியதாவது:
உருளை வடிவிலான இந்த ஆட்டக்காய் சற்று அரைக்கோள வடிவ தலைப் பகுதியையும், தட்டையான அடிப் பகுதியையும் கொண்டுள்ளது. சிறிய அளவிலான 1.3 செ.மீ உயரமுள்ள இந்த ஆட்டக்காய் 1.5 செ.மீ. விட்டம் கொண்ட தலைப் பகுதியுடனும், 1.3 செ.மீ விட்டம் கொண்ட அடிப்பகுதியுடனும் அமைந்துள்ளது. கறுமை நிறமுடைய இந்த ஆட்டக்காய் பளபளப்பான மேற்பரப்புடன் காணப்படுகிறது.
தந்தத்தால் செய்யப்பட்ட ஆட்டக்காயை வைத்துப் பாா்க்கும் போது, கீழடியில் மேம்பட்ட தமிழச் சமூகம் வாழ்ந்ததற்கான சான்றாக இதைக் கருதலாம் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...