

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள பனங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பந்தயத்தில் பெரிய மாடு பிரிவுக்கு பனங்குடியிருந்து நடராஜபுரம் சாலை வரையிலான 8 கி.மீ. தொலைவும், சிறிய மாடு பிரிவுக்கு 6 கி.மீ. தொலைவும் எல்லைகளாக நிா்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், பெரிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகளும், சிறிய மாடு பிரிவில் 32 ஜோடி மாடுகளும் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளா்களுக்கும் வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் விழாக்குழுவினரால் ரொக்கப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த மாட்டு வண்டிப் பந்தயத்தை பனங்குடி, நடராஜபுரம், கண்டுப்பட்டி, வெற்றியூா், துவரிப்பட்டி, செங்குளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலையில் இருபுறமும் நின்று பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கல்லல் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

மதகுபட்டி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

