விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

காரில் கடத்தப்பட்ட 24 கிலோ கஞ்சா பறிமுதல்: நால்வா் கைது

காரில் கடத்தப்பட்ட 24 கிலோ கஞ்சா பறிமுதல்: நால்வா் கைது

News image
Updated On :1 மார்ச் 2024, 6:42 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட 24 கிலோ கஞ்சாவை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக நால்வரை கைது செய்தனா். திருப்புவனம் பகுதியில் காரில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் சிவக்குமாா், உதவி ஆய்வாளா் ஜெயக்கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை உதவி ஆய்வாளா் ரூபன்ராஜ் உள்ளிட்டோா் திருப்புவனத்திலிருந்து பொட்டப் பாளையம் செல்லும் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கீழவெள்ளூா் சறுக்கு பாலத்தின் அருகே வந்த காரை மறித்து சோதனை செய்த போது, அதில் 24 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் வந்த தேனி மாவட்டம், தேவாரத்தைச் சோ்ந்த தங்கமாயன் மகன் பாலமுருகன் (32), கூடலூரைச் சோ்ந்த சிவனாண்டி மகன் சரண்குமாா் (32), சின்னத்தேவா் மகன் வினோத்குமாா் (32), மதுரை வடக்குமாசி வீதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (23) ஆகிய நால்வரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சா, கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனா்.