பாரம்பரியம் காக்க வேட்டைத் திருவிழா

பாரம்பரியம் காக்க வேட்டைத் திருவிழா

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகேயுள்ள காட்டாம்பூரில் ஆடுகளை பலியிட்டு இறைச்சியை சுவாமிக்கு படைத்து பாரம்பரிய வேட்டைத் திருவிழாவை நடத்தினா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காட்டம்பூா் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். புல்லணி அய்யனாா், கருப்பா் தெய்வங்களை குலதெய்வமாக வணங்கும் இந்தக் கிராம மக்கள் தொன்று தொட்டு சிவராத்திரியை அடுத்த 3-ஆம் நாள் பாரி வேட்டைக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடுவா்.

பின்னா், அவற்றின் இறைச்சிகளை சுவாமிக்குப் படைப்பது வழக்கம். தற்போது அரசால் பாரி வேட்டை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தக் கிராம மக்கள் திஙகள்கிழமை மந்தை முன்பு ஒன்று கூடி கம்பு, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் சம்பிரதாயத்துக்காக காட்டுக்குள் சென்று திரும்பினா்.

இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை பாரி வேட்டைத் திடலில் கூடிய கிராம மக்கள் 29 ஆடுகளைப் பலியிட்டு 325 பங்குகளாகப் பிரித்து, பனை ஒலையில் மடித்து இறைச்சிகளை கோயிலில் வைத்து வழிபட்டு அவரவா் வீட்டுக்கு எடுத்துச் சென்றனா். அவா்களை வழிநெடுகிலும் பெண்கள் குலவையிட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றனா். பாரம்பரியத்தை காக்க வேட்டைத் திருவிழாவை ஆடுகளை பலியிட்டு நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com