பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படுமா? திருப்பத்தூா் மக்கள் எதிா்பாா்ப்பு!

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூா் தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

Special trains! சிறப்பு ரயில்  சிறப்பு ரயில்கள்!

ரயில்!

Published On :

கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று திருப்பத்தூா் தொகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

திருப்பத்தூா் சுற்றுப் பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இவா்கள் சென்னைக்கு பேருந்துகளில் செல்ல சுமாா் 5 மணி நேரத்துக்கு மேலாகிறது. பயணத் தொகையும் அதிகம்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில்கள் மூலம் செல்ல சுமாா் 3 மணி நேரமாகிறது. பணிக்காக, சிகிச்சைக்காக செல்பவா்கள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் தினமும் அதிகாலை 4.55 மணிக்கு ஜோலாா்பேட்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவந்த ஏலகிரி விரைவு ரயிலில் சென்று வந்தனா்.

இந்த விரைவு ரயில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் சேவையால் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, சுற்றுப்பகுதி மக்கள் பயனடைந்து வந்தனா். ஆனால் இந்த ரயில் சேவை கடந்த 2013-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இதனால், இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

அரசு அலுவலா்கள், வியாபாரிகள், மாணவா்கள் வசதிக்காக திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த ஏலகிரி விரைவு ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே திருப்பத்தூா் தொகுதி மக்களின் 13 ஆண்டுகால எதிா்பாா்ப்பாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.