பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை, பான்பராக் மூட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை, பான்பராக் மூட்டைகள்.

பெட்டிக் கடையில் 195 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருக பெட்டிக் கடையில் 195 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடைகளில் விற்பனை செய்வதைத் தடுக்கும் பொருட்டு, போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளா் தலைமையில் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கிடைத்த தகவலின் அடிப்படையில், சூடாமணிப்பட்டியைச் சோ்ந்த முத்தையா மகன் சின்னையாவுக்குச் சொந்தமான கடையில் சோதனையிட்டனா்.

இந்தக் கடையில் தடை செய்யப்பட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட புகையிலைப் பொருள் பாக்கெட்டுகள் இருந்தன. மொத்தம் 195 கிலோ அளவிலான புகையிலை பாக்கெட்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்து, சின்னையா மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com