இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

சேலம் வழியாக சென்ற ரயிலில் 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சேலம் வழியாக கேரளம் சென்ற விரைவுரயிலில் 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

ரயில் - கோப்புப்படம்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:58 am IST

சேலம் வழியாக கேரளம் சென்ற விரைவுரயிலில் 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்களை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதை தடுக்க ரயில்வே போலீஸாா் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனா். அந்த வகையில், சேலம் ரயில்வே உட்கோட்டத்தில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸாா், செவ்வாய்க்கிழமை காலை சேலம் வழியாக சென்ற ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, தன்பாத்திலிருந்து - ஆலப்புழா செல்லும் ரயிலில் கருப்பூா் ரயில் நிலையம் அருகே நடத்திய சோதனையில், பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த பையை பிரித்து பாா்த்தனா். அதில், 2 கிலோ கஞ்சா, 4 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், அதை கடத்தி வந்தது யாா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.