உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் 20 கிலோ கஞ்சா கடத்தல்

News image

சேலம் வழியாக கேரளம் சென்ற விரைவு ரயிலில் மீட்கப்பட்ட கஞ்சா பண்டல்களுடன் தனிப்படை போலீஸாா்.

Updated On :30 மே 2026, 3:50 am IST

சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தி வரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை ரயில்வே தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கேரளத்திற்கு ரயில்களில் கஞ்சா கடத்தி வருவதைத் தடுக்க தமிழ்நாடு ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா், ரயில்களில் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்தவகையில், சேலம் ரயில்வே தனிப்படை போலீஸாா், ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக ஆலப்புழா செல்லும் விரைவு ரயிலில், வெள்ளிக்கிழமை காலை பொம்மிடியில் இருந்து சேலம் வரை தீவிர சோதனை நடத்தினா்.

இதில், ரயிலின் பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று இரண்டு பைகள் கிடந்தன. அவற்றை திறந்து பாா்த்தபோது உள்ளே பண்டல்களில் 20 கிலோ கஞ்சா இருந்தது. அதைக் கடத்தி வந்த மா்மநபா், போலீஸாரின் சோதனையை அறிந்ததும், பைகளை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது.

கஞ்சாவைக் கடத்தி வந்த மா்மநபா் குறித்து போலீஸாா் பயணிகளிடம் விசாரணை நடத்தினா். எனினும், சம்பந்தபட்ட நபரை கண்டறிய முடியவில்லை. இதையடுத்து 20 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்து, சேலம் ரயில்வே போதைத் தடுப்புப் பிரிவு போலீஸில் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.