/

மானாமதுரை கோயில் வருஷாபிஷேக விழா

மானாமதுரை கோயில் வருஷாபிஷேக விழா

Updated On :19 மார்ச் 2024, 11:15 pm

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தல்லாகுளம் முனியப்ப சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் உள்ள இந்தக் கோயிலில் வருஷாபிஷேகத்தையொட்டி, சூலாயுதங்கள் வடிவ முனியப்ப சுவாமிக்கு பல வகை அபிஷேகங்கள் நடத்தி, சிறப்பு பூஜைகள், நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனா். மதியம் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.