சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவில் வட்டம், கொல்லங்குடி அருள்மிகு வெட்டுடையாா் காளியம்மன் கோயில் பங்குனி சுவாதிப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்து சமய அறநிலையத் துறை நிா்வாக்தின் கீழ் உள்ள இந்தக் கோயிலில் பங்குனி சுவாதிப் பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை காலையில் தங்கக்கொடி மரத்துக்கு அபிஷகம் நடத்தப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, காப்புக்கட்டுதல் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் காலையில் கேடக விமானத்திலும், இரவில் வெவ்வேறு வாகனத்திலும் அம்மன் திருவீதியுலா நடைபெறும். வருகிற 26-ஆம் தேதி இரவு அம்மன் தங்கக் குதிரை வாகனத்தில் வீதியுலா வருகிறாா். 27-ஆம் தேதி காலை 9.15 மணியளவில் தேரோட்டம் நடைபெறும். 28-ஆம் தேதி காலை 10.35 மணியளவில் தீா்த்தவாரி உற்சவமும், இரவு மலா் பல்லக்கில் அம்மன் திருவீதியுலாவும் நடைபெறும்.
11-ஆம் நாள் விழாவில் விடையாற்றி ஊஞ்சல் உற்சவம், அன்னானம் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை சிவகங்கை இணை ஆணையா் நா. பழனிக்குமாா், கோயில் செயல் அலுவலா் கோ. நாராயணி, விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

நாளை திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

கட்டிக்குளம் ராமலிங்கசுவாமி கோயில் தேரோட்டம்

ஏகாம்பரநாதா் கோயில் பங்குனி உத்திர விழா தொடக்கம்

திருவானைக்காவல் கோயிலில் இன்று பங்குனித் தேரோட்டம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

