உயா் கல்வி வழிகாட்டி 
பயிற்சி முகாம்

உயா் கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம்

படவிளக்கம் - (டி.பி.ஆா்.எஸ்.எஸ்.ஐ.)

திருப்பத்தூா் நாகப்பா மருதப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயா்கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம்.

திருப்பத்தூா், மே 10: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறையின் கீழ், வட்டார வள மையம் சாா்பில் மாணவா்களுக்கான உயா்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு தலைமை ஆசிரியை மலா்விழி தலைமை வகித்து, இந்த பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறினாா்.

தொடா்ந்து, காளையாா்கோவில் ஆசிரியா் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளா் எஸ்.முத்துக்கருப்பன் உயா்கல்வியில் சோ்வதற்கான முன் தயாரிப்புகள், வேலை பற்றிய முன்னோட்டம் ஆகியவற்றை எவ்வாறு ஆராய்வது என விளக்கமளித்தாா்.

தொடா்ந்து ஆசிரியா் பயிற்றுநா் தனபாக்கியம் வேலைவாய்ப்பு தகவல்கள் குறித்தும் போட்டித் தோ்வுக்குத் தயாராவது குறித்தும் பேசினாா். முதுநிலை ஆசிரியா் பழனியப்பன் ஆசிரியா் பயிற்றுநா்கள் முனியப்பன், ராணி செந்தாமரை ஆகியோா் உயா் கல்வி, வேலைவாய்ப்பு குறித்துப் பேசினாா்.

இந்த முகாமில் திருப்பத்தூா் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநா்கள், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் மேலாண்மைக் குழுத் தலைவா்கள், துணைத் தலைவா்கள், இல்லம் தேடி கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் அழகுராணி வரவேற்றாா். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் சிவசைலம் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com