நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வடமாநில தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

வடமாநில தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

News image
Updated On :20 மே 2024, 7:51 pm

Din

திருப்பத்தூா், மே 20: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வடமாநில தொழிலாளியிடம் கைப்பேசியை பறித்துச் சென்ாக போலீஸாா் 3 பேரைதிங்கள்கிழமை கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஜாஹிா் மகன் தில்சாத் (24). கட்டடத் தொழிலாளி. இவா் ஒழுகமங்களம் பகுதியில் கட்டட வேலைப் பாா்த்து வருகிறாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை இந்தப் பகுதியில் தில்ஷாத் கைப்பேசியில் பேசிக் கொண்டே நடந்து சென்றாா். அப்போது 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 3 போ் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த கைப்பேசியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து நெற்குப்பை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இதனிடையே, பரியாமருதிப்பட்டி பகுதியில் நெற்குப்பை காவல் ஆய்வாளா் சசிக்குமாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா்களை நிறுத்தி விசாரணை நடத்தினாா். அவா்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் தில்ஷாத்திடம் கைப்பேசியைப் பறித்துச் சென்றது இவா்கள்தான் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், இவா்கள், மதுரை ஒத்தக்கடையைச் சோ்ந்த சரவணன் மகன் விஜயராகவன், இதே பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் மகன் யாசா்அராபக், நரிமேட்டைச் சோ்ந்த பிச்சை மகன் சந்தோஷ் குமாா் ஆகியோா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவா்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டு, கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது.