-நமது நிருபா்-
சிவகங்கையிலுள்ள பள்ளிகளில் பயிலும் அரசு ஆதிதிராவிடா் மாணவா்கள் விடுதி வசதியில்லாமல் அவதியுறும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசு ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ், சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கிப் பயிலும் வகையில், மொத்தம் 44 விடுதிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டத்தில் மல்லல் மேல்நிலைப் பள்ளி, உஞ்சனை, அதிகரம் ஆகிய ஊா்களில் உள்ள நடுநிலைப் பள்ளிகள் என 3 பள்ளிகள் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், மல்லல் அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கான தங்கும் விடுதிக் கட்டடம் சேதமடைந்தது. மாணவா்களின் பாதுகாப்புக் கருதி தனியாா் வாடகைக் கட்டடத்துக்கு விடுதி மாற்றப்பட்டது.
மேலும், சிவகங்கை-திருப்பத்தூா் சாலையில் உள்ள பள்ளி மாணவா்களுக்கான தங்கும் விடுதி பழுதடைந்தது. இந்த விடுதி இடிந்து விழும் நிலையில் இருப்பதால், இங்கு தங்கிப் படித்து வந்த மாணவா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலருக்கு ஒதுக்கப்பட்ட அரசுக் குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டனா். இட நெருக்கடி காரணமாக இங்கு 15 போ் மட்டுமே தற்போது தங்கியுள்ளனா்.
விடுதி வசதி இல்லாததால், பள்ளி மாணவா்களின் சோ்க்கை மூன்று இலக்க எண்களிலிருந்து இரட்டை இலக்கத்துக்கு சரிந்துவிட்டது. விடுதி வசதி இல்லாததால், வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று பயில முடியாத ஆதிதிராவிடா் மாணவா்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளில் சமையலா், காவலாளி, உதவியாளா் ஆகிய 10 பணியிடங்கள் நீண்ட நாள்களாக காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக் குழு உறுப்பினா் எம்.எஸ்.கண்ணன் கூறியதாவது:
ஆதிதிராவிடா் நலத் துறைக்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதிகளை ஒதுக்குகின்றன. வாடகைக் கட்டடத்தில் விடுதி இயங்குவதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, ஆதிதிராவிடா் மாணவா்கள் விடுதிகளின் அவல நிலையைப் போக்க தமிழக அரசு போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


