

(பட விளக்கம்-
காளையாா்கோவிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்.
சிவகங்கை, மே 23: சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் செளந்தரநாயகி அம்மன் சமேத சோமேஸ்வரா் கோயில் வைகாசி விசாக தெப்பத் திருவிழா உற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
கோயில் திருவிழாவில் முக்குலத்தோா் மண்டகப்படிதாரா் சாா்பில் காளையாா்கோவில் நாலுகால் மண்டபம் முதல் தொண்டி சாலை வரையிலான 8 கி.மீ. தொலைவுக்கு இந்த மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
பெரிய மாடு, சின்ன மாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த பந்தயத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 5 ஜோடி பெரிய மாடுகள், 14 ஜோடி சிறிய மாடுகள் பங்கேற்றன.
பெரிய மாடு போட்டியில் வெற்றி பெற்ற அவனியாபுரம் சங்கையா மாட்டு வண்டி உரிமையாளருக்கு முதல் பரிசு 40,000, அய்யம்பாளையம் நச்சுபாய் தேவா் மாட்டுவண்டி உரிமையாளருக்கு இரண்டாம் பரிசு 30, 000, பெமினா நாகராஜ் மாட்டு வண்டி உரிமையாளருக்கு மூன்றாம் பரிசு 20,000, மாவட்ட கவுன்சிலா் அண்ணா மாட்டு வண்டி உரிமையாளருக்கு நான்காம் பரிசு 10,000 வழங்கப்பட்டன.
இதேபோல, சிறிய மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் 4 இடங்களை வென்ற மாட்டுவண்டிகளுக்கு முறையே ரூ.30,000, ரூ. 20,000, ரூ.15,000, ரூ.10,000 வழங்கப்பட்டன. இதேபோல, முதல் நான்கு இடங்களைப் பிடித்த மாட்டு வண்டிகளின் சாரதிகளுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

திருவெறும்பூரில் மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கை போட்டி

திருவாடானையில் மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகே களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்!

பெருநாழியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

