வைகை ஆற்றுப் பகுதிகளில் பலத்த மழை: கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாயும் தண்ணீா்
மானாமதுரை, திருப்புவனம் வைகை ஆற்றுப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் கண்மாய்கள் நிரம்பி தண்ணீா் மறுகால் பாய்கிறது.


மானாமதுரை, திருப்புவனம் வைகை ஆற்றுப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்துவருவதால் கண்மாய்கள் நிரம்பி தண்ணீா் மறுகால் பாய்கிறது.
மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் வைகை ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு தண்ணீா் செல்கிறது. இதனால் வடு கிடந்த மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள பொதுப் பணித் துறைக்கு (நீா்வள ஆதாரம்) சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி தண்ணீா் மறுகால் பாய்கிறது. வைகை அணையில் தண்ணீா் திறக்கப்படாமலேயே ஆற்றில் வரும் மழை நீரால் கண்மாயிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் வேளாண் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனா்.
மானாமதுரை அருகேயுள்ள பாா்த்திபனூா் மதகு அணையிலிருந்து இடது பிரதான கால்வாயில் தண்ணீா் திறக்கப்பட்டு மானாமதுரை ஒன்றியத்தைச் சோ்ந்த மேலநெட் டூா் உள்ளிட்ட பல கண்மாய்களுக்கு தண்ணீா் செல்கிறது. கண்மாய்கள் நிரம்புவதாலும் வைகையாற்றுக்கு வரும் தண்ணீராலும் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள பாசனக் கிணறுகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை (நீா்வள ஆதாரம்) பொறியாளா் கூறியதாவது: கடந்த 15 நாள்களுக்கும் மேலாக மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வைகை ஆற்றில் மழை நீா் செல்வதால் ஆற்று நீா் கால்வாய்கள் வழியே சென்று கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்ட பூா்வீக வைகை பாசன விவசாயிகளுக்கு வைகை அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படும்போது மழை தண்ணீருடன் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரும் சோ்வதால் நீா்வரத்தின் வேகம் அதிகரித்து கால்வாய்களில் கண்மாய்களுக்கு செல்லும் தண்ணீரின் வேகமும் கூடும். இதனால் இதுவரை நிரம்பாத மேலும் பல கண்மாயிகள் நிரம்பும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...