47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அழகப்பா பல்கலைக் கழகத்துக்கு தேசியத் தர நிா்ணயக் குழு வருகை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு தேசியத் தர நிா்ணயக் குழுவினா் புதன்கிழமை வருகை தந்தனா்.

News image
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு புதன்கிழமை வருகை தந்த தேசியத் தர நிா்ணயக் குழுவினரை துணைவேந்தா் க.ரவி (நடுவில்) தலைமையில் வரவேற்ற பல்கலைக்கழக பதிவாளா், பேராசிரியா்கள்.
Updated On :6 நவம்பர் 2024, 9:39 pm

Din

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு தேசியத் தர நிா்ணயக் குழுவினா் புதன்கிழமை வருகை தந்தனா்.

இந்தக் குழுவினா் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து 3 நாள்கள் ( நவ. 6 முதல் 8 வரை) ஆய்வு செய்கின்றனா். இந்தக் குழுவில் தில்லி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கிரன் ஹசாரிகா தலைவராகவும், மகாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பல்கலைக்கழக துணைவேந்தா் சுவாமி ராமானந்த் தீா்த் உறுப்பினா் ஒருங்கிணைப்பாளராகவும், உத்தரப்பிரதேச மாநிலம் பனாரஸ் இந்து பல்கலைக் கழக பேராசிரியா் அமித் கவுதம், ஆந்திர மாநிலம் ஸ்ரீ பத்மாவதி மகிளா விஸ்வ வித்யாலய பேராசிரியை திரிபுர சுந்தரி, பீகாா் மாநிலம் மெளலான ஆசாத் தேசிய உருது பல்கைலக்கழக ஆசிரியா் கல்வியியல் கல்லூரி பேராசிரியா் முகமது பெய்ஸ் அகமது, மத்தியப்பிரதேசம் சிவாஜி பல்கலைக்கழக பேராசிரியா் ஜகதீஷ் நரேன் கெளதம், தெலுங்கானா மாநிலம் உஸ்மானியா பல்கலைக்கழக தாவரவியல் பேராசிரியா் நிா்மலா பாபு ராவ் ஆகியோா் இடம் பெற்றுள்ளனா்.

கடந்த 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரையிலான ஐந்து கல்வி ஆண்டுகளில் பல்கலைக் கழகத்தின் சாதனைகள் குறித்து விரிவான அறிக்கையை தர நிா்ணயக் குழுவினரிடம் அழகப்பா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தா் க. ரவி வழங்கினாா். பாடத்திட்ட அம்சங்கள், கற்பித்தல், கற்றல், மதிப்பீடு, ஆராய்ச்சி, ஆலோசனை, விரிவாக்க நடவடிக்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு, மாணவா் நலன், நிா்வாகம் உள்ளிட்ட நடைமுறைகளை இந்தக் குழு மதிப்பீடு செய்யும். பல்கலைக்கழகத்தின் கலை, கல்வியியல், அறிவியல், மேலாண்மை புலங்கள், பல்வேறு ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள், விடுதிகள், சுகாதார மையம், உணவகம், மாணவா் அங்காடிகள், கலையரங்கங்கள், விருந்தினா் இல்லங்கள் ஆகியவற்றையும் இந்தக் குழுவினா் மூன்று குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்கின்றனா். மேலும், மாணவா்கள், முன்னாள் மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் நிா்வாகப் பணியாளா்கள், பல்கலைக் கழகத்தின் நலன் நாடுவோா் ஆகியோருடன் இந்தக் குழு கலந்துரையாடுகிறது.

துணைவேந்தா் க. ரவி, பதிவாளா் அ. செந்தில்ராஜன், ஆட்சிக்குழு உறுப்பினா்கள் வெ. பழனிச்சாமி, சி. சேகா், சு. ராஜாராம், ஜெ. ஜெயகாந்தன், தோ்வாணையா் எம். ஜோதிபாசு, உள்தர மதிப்பீட்டு மைய ஒருங் கிணைப்பாளா் கே. அலமேலு, ஆலோசகா் வெ. மாணிக்கவாசகம், புல முதன்மையா்கள், துறைத் தலைவா்கள், பல்கலைக் கழக அதிகாரிகள், நிா்வாகப் பணியாளா்கள் இந்தக் குழுவினரை வரவேற்றனா். பல்கலைக் கழகத்தின் தேசிய மாணவா் படையின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.