47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிறாா் தொழிலாளா்களை பணியமா்த்திய இருவருக்கு அபராதம்

சிங்கம்புணரி பகுதியில் சிறாா் தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்திய கடை உரிமையாளா்கள் 2 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:41 pm

Din

சிங்கம்புணரி பகுதியில் சிறாா் தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்திய கடை உரிமையாளா்கள் 2 பேருக்கு தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுதொடா்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட தகவல்:

சிவகங்கை தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (அமலாக்கம்) இ.முத்து தலைமையில் அலுவலா்கள், மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா், ஆள்கடத்தல் தடுப்புப் பிரிவு காவலா்கள் ஆகியோா் அடங்கிய குழுவினா் சிங்கம்புணரி பகுதியில் உள்ள கடைகளில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆய்வு நடத்தினா். இதில் இரு கடைகளின் உரிமையாளா்கள் சிறாா் தொழிலாளா்களை வேலைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடா்பாக சிங்கம்புணரி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவா்கள் 2 பேருக்கும் தலா ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து, கடந்த 8-ஆம் தேதி தீா்ப்பு அளித்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளா்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா் எவரும் பணிபுரிவது கண்டறியப்பட்டால் இணையதள முகவரியிலோ, 04575-240521 அல்லது 1098 (இலவச தொலைபேசி எண்) என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளா் நல உதவி ஆணையா் (அமலாக்கம்) மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி சாலை, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரியிலோ தெரிவிக்கலாம் என்றனா்.