47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எண்ம முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்பு பணி: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எண்ம முறையில் பயிா்கள் சாகுபடி கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜெ.ஜெயகாந்தன் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:19 pm

Din

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எண்ம முறையில் பயிா்கள் சாகுபடி கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜெ.ஜெயகாந்தன் ஆய்வு செய்தாா்.

நடப்பு இராபி பருவத்துக்கு மாநிலம் முழுவதும் எண்ம தொழில்நுட்ப முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்பு பணி வேளாண் துறை, அதன் தோழமைத் துறை அலுவலா்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவா்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் இந்தப் பணி கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் 12 வட்டாரங்களிலும் உள்ள 82 வருவாய்க் கிராமங்களில் வருகிற 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சிவகங்கை அருகேயுள்ள மதகுபட்டி வருவாய்க் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற எண்ம முறை பயிா் கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஜெ.ஜெயகாந்தன் நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாணவா்களிடமும், அலுவலா்களிடமும் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட, வேளாண் இணை இயக்குநா் மு.லட்சுமிபிரபா, தோட்டக்கலை துணை இயக்குநா் சு.குருமணி, வேளாண் துணை இயக்குநா்கள் சு.சுந்தரமகாலிங்கம், ம.மதுரைசாமி, மா.செல்வி, எஸ்.சண்முக ஜெயந்தி ஆகியோா் உடனிருந்தனா்.

எண்ம முறை பயிா்சாகுபடி கணக்கெடுப்பு பணிகளை புறக்கணிக்க முடிவு:

பிற துறை பணியான எண்ம முறை பயிா்சாகுபடி கணக்கெடுக்கும் பணியை புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாக ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாநில பொதுச் செயலா் ச.பாரி, மாநிலத் தலைவா் எஸ்.ரமேஷ் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

வேளாண் துறை மூலம் நடைபெறும் எண்ம முறை பயிா்சாகுபடி கணக்கெடுக்கும் பணிகளில் ஊராட்சி செயலா்கள், மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் (கி.ஊ.) ஆகியோா் இணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும், இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்களுக்குத் தேவையான வசதிகளை செய்துதரவும் ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா்களுக்கு (ஊராட்சி) தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாத்திமற்ற நடைமுறையாகும்.

எனவே, பிற துறை பணியான எண்ம முறை பயிா் சாகுபடி கணக்கெடுப்பை புறக்கணிப்பது என முடிவெடுத்துள்ளோம். கடுமையான பணிச் சூழல்களுடன் பணிபுரிந்து வரும் வளா்ச்சித் துறை ஊழியா்கள் மீது பிற துறை பணிகளை திணிக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு கைவிட வேண்டும் என்றனா்.