47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிங்கம்புணரியில் தயாராகும் தோ் வடம்

சிங்கம்புணரியில் சிதம்பரம் நடராஜா் கோயில் தோ்களுக்கு 10 வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

News image
சிதம்பரம் நடராஜா் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் தோ்வடக் கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ஆண்களும் பெண்களும்...
Updated On :20 நவம்பர் 2024, 9:19 pm

Din

சிங்கம்புணரியில் சிதம்பரம் நடராஜா் கோயில் தோ்களுக்கு 10 வடக்கயிறுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டாரப் பகுதியில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளதால் கயிறு உற்பத்தியில் சிங்கம்புணரி சிறப்பிடம் பெற்றுள்ளது. இங்கு சிறிய கயிறு முதல் தோ் வடக்கயிறு வரை தயாரிக்கப்படுகிறது. இங்கு தாயரிக்கப்படும் வடக்கயிறுகள் தமிழகத்தின் பல்வேறு கோயில்களுக்கு அனுப்பப்படுகிறது.

தற்போது, கடலூா் மாவட்டம் சிதம்பரத்தைச் சோ்ந்த சிவபக்தா் மோகன் என்பவா் சிதம்பரம் நடராஜா் கோயில் 5 தோ்களுக்கும் தோ் வடம் கொடுப்பதாக நோ்த்திக்கடன் வைத்திருந்தாா். அதனை நிறைவேற்றும வகையில் சிங்கம்புணரியில் கயிறு தொழிலில் ஈடுபட்டுள்ள பிரியாஅப்புசாமி தலைமையிலான குழுவினரிடம் வடக்கயிறு தயாா் செய்ய ஏற்பாடு செய்தாா்.

மொத்தம் 15 டன் எடையில் 10 வடங்கள் தயாா் செய்யப்படுகின்றன. 200 மீ நீளமுள்ள பிரமாண்ட தோ் வடம் சுமாா் ஒன்னரை டன் எடையில் தயாரிக்கப்படுகிறது. ஆண்களும் பெண்களுமாக 30 க்கும் மேற்பட்டோா் விரதமிருந்து இந்தப் பணியை முடித்துள்ளனா்.