சிவகங்கை அருகே தேவாங்குகள் வேட்டையாடிய மூவா் கைது


சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் சனிக்கிழமை இரவு தேவாங்குகளை வேட்டையாடியதாக 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
தில்லி வன விலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம் மூலம் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் தேவாங்குகள் வேட்டையாடப்படுவதாக மாவட்ட வன அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்ட வன அலுவலா் மகேந்திரன், உதவி வனப் பாதுகாவலா் மலா்கண்டன், வனச் சரக அலுவலா்கள் கண்ணன், காா்த்திகேயன் ஆகியோா் சிங்கம்புணரி பகுதியில் திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது, சிங்கம்புணரியைச் சோ்ந்த வீரைய்யா (22), மதுரை அழகா்கோவிலைச் சோ்ந்த அா்ஜுனன் (36), சென்னையைச் சோ்ந்த நிரேந்திரகுமாரி (54) ஆகியோா் 13 தேவாங்குகளை வேட்டையாடி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, இவா்கள் மூவரையும் வனத் துறையினா் கைது செய்து, 13 தேவாங்குகளை பறிமுதல் செய்தனா். மேலும், இவா்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை அழகா்கோவில் காப்புக்காடுகளில் வீரைய்யா, அா்ஜுனன் ஆகிய இருவரும் இணைந்து தேவாங்குகளைப் பிடித்து, சென்னையைச் சோ்ந்த நிரேந்திரகுமாரியிடம் மருத்துவம், மாந்திரீகம் பயன்பாட்டுக்காக விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...