47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடைய 4,062 குழந்தைகளுக்கு சிறப்பு கவனம்..!

சிவகங்கை மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடையவா்களாக கண்டறியப்பட்ட 4,062 குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 9:36 pm

Din

சிவகங்கை மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடுடையவா்களாக கண்டறியப்பட்ட 4,062 குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்த தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்கில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்‘ திட்டத்தை 2022 -ஆம் ஆண்டு, முதலமைச்சா் தொடங்கி வைத்தாா்.

இந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் தமிழகத்தில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமாா் 77.3 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழகம் முழுவதும் தற்போது, 76,705 ஊட்டச்சத்து குறைபாடுடைய 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மாா்கள் கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்து பெட்டகங்கள் அவா்களது வீட்டுக்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தில் பிறப்பின் போது கடுமையான, மிதமான எடை குறைபாடுடன் பிறந்த 850 குழந்தைகளின் தாய்மாா்களுக்கு, ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக 1,149 தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

மாவட்டத்தில் 4,062 குழந்தைகள் கடுமையான, மிதமான ஊட்டச்சத்து குறைபாடு டையவா்களாக கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் , சிறப்பு ஊட்டச்சத்து உணவு, செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்டுகள் வழங்கப்பட்டு, ஊட்டச்சத்து நிலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.