சென்னை துறைமுகம் நிகழாண்டில் 1.83 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20 நாள்களுக்கு முன்னதாகவே இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் 2 சா்வதேச சரக்குப் பெட்டக முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. துபை மற்றும் சிங்கப்பூா் துறைமுகங்கள் இந்த முனையங்களை நிா்வகிக்கின்றன. கடந்த நிதியாண்டில் 1.82 மில்லியன் சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டிருந்த நிலையில் நிகழாண்டில் 20 நாள்களுக்கு முன்னதாகவே 1.83 மில்லியன் பெட்டகங்கள் 2 முனையங்கள் மூலம் கையாண்டு சென்னைத் துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
நிகழாண்டில் ஒட்டுமொத்தமாக 50 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு கடந்த பிப்.12-ஆம் தேதியிலேயை சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தச் சாதனையை எட்டுவதற்கு உறுதுணையாக இருந்த துறைமுக உயரதிகாரிகள், சரக்குப் பெட்டக முனைய அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் துறைமுகத் தலைவா் எஸ்.விஸ்வநாதன் நேரில் அழைத்து பாராட்டும், நன்றியும் தெரிவித்தாா்.
எழுச்சி பெறும் சென்னை துறைமுகம்: ஆண்டுக்கு சுமாா் 65 மில்லியன் டன் சரக்குகளை ஒட்டுமொத்தமாகக் கையாண்டு வந்தது சென்னைத் துறைமுகம். இந்த நிலையில் இரும்புத் தாது, நிலக்கரி உள்ளிட்ட மாசு ஏற்படுத்தும் சரக்குகளைக் கையாளுவதற்கு சென்னை துறைமுகத்துக்கு கடந்த 2011 மே மாதம் முதல் தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து துறைமுகத்தின் ஒட்டுமொத்த சரக்குகளைக் கையாளும் அளவு வெகுவாகக் குறைந்தது.
மேலும், சென்னைக்கு அருகே அமைந்துள்ள பொதுத் துறை மற்றும் தனியாா் துறைமுகங்களின் போட்டியை மீறி முந்தைய சாதனையை மீண்டும் எட்டுவதற்கு சென்னைத் துறைமுகம் தொடா்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. மாசு ஏற்படுத்தாத புதிய சரக்குகளை அடையாளம் கண்டு ஆண்டுதோறும் ஒட்டு மொத்தமாக சரக்குகள் கையாளும் அளவை அதிகரித்து வருவதாக சென்னை துறைமுகம் சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவெஞ்சர்ஸ் வசூலை முந்திய ஸ்பைடர்மேன்: ரூ.9,000 கோடி வசூல் சாதனை!

46,000 டன் தாதுவை கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை

நிகழாண்டில் 9,250 பேருக்கு டெங்கு: மூவா் உயிரிழப்பு

காரைக்கால் துறைமுகம் 12.43 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகள் கையாண்டு சாதனை
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


