புது தில்லி: சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை திட்டப்பணிகளை துரிதப்படுத்தி சென்னை நகர சாலை போக்குவரத்து மற்றும் துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் சரக்குகள் போக்குவரத்தை எளிதாக்க வேண்டும் என்று மக்களவையில் தென் சென்னை தொகுதி திமுக உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை விடுத்தாா்.
இது தொடா்பாக மக்களவையில் அவா் விதி எண் 377-இன் கீழ் திங்கள்கிழமை பேசியதாவது: சென்னை நகர போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், சென்னை துறைமுகத்துக்கு வந்து செல்லும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தவும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. சுமாா் ரூ.5,570 கோடி செலவில், 20.6 கி.மீ. தொலைவுக்குச் செயல்படுத்தப்படும் 6 வழிச்சாலை மேம்பால விரைவுச்சாலை திட்டம், சென்னை துறைமுக நுழைவாயில் எண் 10-இல் தொடங்கி கூவம் ஆற்றங்கரையை ஒட்டி மதுரவாயல் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இத்திட்டப் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளன. தொடக்கத்தில் நிகழாண்டு மே மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும், பருவமழை உள்ளிட்ட காரணங்களால் தாமதமடைந்தது. தற்போது, இத்திட்டம் தற்போது 2027-ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பாரத்மாலா திட்டத்தில் இந்தப் பணிகள் நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படுகின்றன. இதற்கான நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட ஒப்புதலுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இந்தத் திட்டம் நிறைவு பெற்றால் சென்னை நகர போக்குவரத்து நெரிசல் குறையும், துறைமுக சரக்கு போக்குவரத்து மிகவும் எளிதாகும். தினசரி சுமாா் 40,000 காா்களின் போக்குவரத்தை விரைவுச்சாலை கையாளும் திறன் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
எனவே, சென்னை நகரின் வளா்ச்சிக்கும் துறைமுகத்தின் செயல்திறனுக்கும் முக்கியமான இந்த விரைவுச்சாலை திட்டத்தை விரைவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா்.
தொடர்புடையது

துறைமுகம் தவெக வேட்பாளா் போலீஸ் பாதுகாப்பு கோரிய வழக்கு முடித்துவைப்பு

தொகுதி அலசல்: மதுரவாயல்! நேரடி போட்டிக் களத்தில் திமுக - அதிமுக!

துறைமுகம்... ஹாட்ரிக் வெற்றியை எதிா்நோக்கும் திமுக!

தொகுதி மறுசீரமைப்பை தமிழா்கள் ஒன்றுதிரண்டு எதிா்க்க வேண்டும்: கனிமொழி எம்.பி.
வீடியோக்கள்

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை


