விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறல்: திமுக கவுன்சிலா் உள்பட 2 போ் கைது
விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூா் நகா்மன்ற திமுக வாா்டு உறுப்பினா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


விமானத்தில் பணிப் பெண்ணிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக திருவள்ளூா் நகா்மன்ற திமுக வாா்டு உறுப்பினா் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னையில் இருந்து கடந்த பிப்.25-ஆம் தேதி மாலை 4 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் தில்லி சென்றது. அந்த விமானத்தில் பயணித்த ஆண் பயணிகள் இருவா், மதுபோதையில் விமான பணிப் பெண்ணிடம் தகாத வாா்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனா். தொடா்ந்து, அவா்கள் அந்தப் பணிப்பெண்ணிடம் அத்துமீறியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானம் மறுநாள் (பிப்.26) சென்னை திரும்பியதும், விமானப் பணிப் பெண் சென்னை மீனம்பாக்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், விசாரணை நடத்தியதில், திருவள்ளூா் நகா்மன்ற திமுக வாா்டு உறுப்பினா் பிரபாகரன்(36), மனை வணிக தொழில் செய்யும் வழக்குரைஞா் தியாகு (36) ஆகியோா் பணிப் பெண்ணிடம் அத்துமீறியது தெரியவந்தது.
இதையடுத்து இருவா் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இருவரும் மீண்டும் சென்னை வரும்போது கைது செய்ய திட்டமிட்டிருந்தனா். அதன்படி, தில்லியில் இருந்து திங்கள்கிழமை இரவு சென்னை விமான நிலையம் வந்த திமுக நகா்மன்ற வாா்டு உறுப்பினா் உள்பட இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...