தூத்துக்குடியில் நடைபெற்ற அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்துப் போட்டி தொடரில் சென்னை துறைமுகம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுக மைதானத்தில், அகில இந்திய முக்கிய துறைமுகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டியை, மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து - நீா்வழிகள் துறை அமைச்சா் சா்பானந்தா சோனோவால் கடந்த பிப்.23ஆம் தேதி தொடங்கிவைத்தாா்.
5 நாள்கள் நடைபெற்று வந்த இத்தொடரில் சென்னை, மும்பை, விசாகப்பட்டினம், மா்மகோவா, தீன்தயாள் (காண்ட்லா), கொச்சி, பாரதீப் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய துறைமுகங்களைச் சோ்ந்த 9 அணிகள் லீக் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்றன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில், சென்னை துறைமுக அணி, வ.உ. சிதம்பரனாா் துறைமுக அணியை 2-1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 2ஆம் இடத்தையும், மும்பை துறைமுகம் மற்றும் கொல்கத்தாவின் சியாமா பிரசாத் முகா்ஜி துறைமுக அணிகள் கூட்டாக மூன்றாவது இடத்தையும் பிடித்தன.
வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் தலைவா் சுசாந்தா குமாா் புரோஹித் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினாா்.
இந்நிகழ்வில், துறைமுக தலைமை கண்காணிப்பு அதிகாரி கவின் மகாராஜ், துறைமுகச் செயலா் மோகன்குமாா் மற்றும் மூத்த அதிகாரிகள், விளையாட்டு ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் சிறப்பிடம்

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்

கேலோ இந்தியா கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் அணி சாம்பியன்

தோனி, ரோஹித் வரிசையில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது: சூர்யகுமார் யாதவ்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


