47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கையில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

ஓசூரில் வழக்குரைஞா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :22 நவம்பர் 2024, 12:36 am

Din

ஓசூரில் வழக்குரைஞா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் 20-ஆம் தேதி வழக்குரைஞா் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்து வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா்கள் சங்கச் செயலா் கே.சித்திரைச்சாமி தலைமை வகித்தாா்.

இதில் வழக்குரைஞா் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். வழக்குரைஞரை அரிவாளால் வெட்டியவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முழக்கமிடப்பட்டது.

ஆா்ப்பாட்டத்தில் சங்கப் பொருளாளா் எஸ்.வல்மீகிநாதன், இணைச் செயலா் நிரூபன்சக்கரவா்த்தி, மூத்த வழக்குரைஞா்கள் எஸ்.ராஜசேகரன், மருது, மதி, தீபன்சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.