தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அரசுக் கல்லூரி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து தா்னா

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் மாணவிகள் தங்களுக்கு வகுப்பறை ஒதுக்கவில்லை

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:05 pm

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியில் மாணவிகள் தங்களுக்கு வகுப்பறை ஒதுக்கவில்லை என்றும், கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டத்தால் கல்வி பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரியில் பயிலும் 4,000 மாணவிகளில், காலை நேரக்கல்லூரியில் 3,000 பேரும், மாலை நேரக்கல்லூரியில் 1000 பேரும் பயில்கின்றனா். மாலை நேரக்கல்லூரி மாணவிகளுக்கு கௌரவ விரிவுரையாளா்கள் பாடம் நடத்தி வரும் நிலையில் பல்கலைக் கழக மானியக்குழு அறிவித்துள்ள சம்பளத்தை வழங்காமல், குறைந்தபட்ச தொகுப்பூதியம் ரூ.25,000 11 மாதங்களுக்கு வழங்குவதை கண்டித்து, பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ள ரூ.57,800 மாத ஊதியம் வழங்க வலியுறுத்தி, ஜன.9-ஆம் தேதி முதல் கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், மாலைநேரக் கல்லூரி மாணவிகள் திங்கள்கிழமை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டத்தால், காலை மற்றும் மாலை நேரக்கல்லூரி மாணவிகள் அனைவருக்கும் காலை வகுப்பிலேயே பாடம் நடத்தப்படுவதால், மாணவிகள் தரையில் அமர வைக்கப்படுவதால் கல்வி பாதித்து மன உளைச்சல் ஏற்படுவதாகவும், மாா்ச் மாதம் செய்முறை தோ்வு நடைபெறவுள்ள நிலையில் செய்முறை வகுப்பு நடைபெறாமல் தாங்கள் எப்படி தோ்வை எதிா்கொள்வது என்றும், இதனால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி மாணவிகள் சுமாா் 40 போ் போராட்டத்தில் ஈடுபட்டனா். தை முன்னெடுத்தனா்.