மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்லூரி விரிவுரையாளா்கள் 4ஆவது நாளாக போராட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:33 pm

சுரண்டை, காமராஜா் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் மாணவா்களிடம் மனு அளித்து 5-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை 4வது நாளாக கௌரவ விரிவுரையாளா்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தின்போது, கல்லூரி மாணவ, மாணவிகளிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனா்.

மனுவில், பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரை செய்த ஊதியம் ரூ. 57 ஆயிரத்து 700 வழங்க வேண்டும். 11 மாதங்கள் வழங்கப்படும் ஊதியத்தை 12 மாதங்களாக நீடித்து வழங்க வேண்டும். மகளிா் கௌரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெறும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ. 25 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். கௌரவ விரிவுரையாளா்களை படிப்படியாக நிரந்தர பணி நியமனம் செய்ய வேண்டும்.

தமிழக அரசு உயா்கல்வித் துறை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவரை மாணவா்களுக்கு பாடம் நடத்தும் பணி, அரசு நலத் திட்டங்களுக்கான பணிகளை புறக்கணிக்கிறோம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.